| ADDED : ஜன 23, 2024 11:20 PM
புதுச்சேரி : முதலியார்பேட்டை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில், நாளை தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது.முதலியார்பேட்டையில் உள்ள, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் (ராமலிங்க சுவாமி கோவில் மடம்) 75ம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா கடந்த, 18ம் தேதி துவங்கியது. தினசரி வள்ளலார் அருளிய திருவருட்பா மற்றும் உரைநடை விண்ணப்பங்கள் முழுதும் உணர்ந்தோதுதல் நிகழ்ச்சி, நடந்து வருகிறது.இன்று காலை 6:00 மணிக்கு அகவல் உணர்ந்தோதுதல் நிகழ்ச்சி, காலை 7:00 மணிக்கு சத்திய ஞான கொடி ஏற்றுவதும் நடைபெறும். காலை 7:30 மணிக்கு வள்ளலார் திரு உருவப்பட ஊர்வலம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு பல்வேறு அறிஞர்கள் பங்கேற்கும் சிறப்பு சொற்பொழி,மதியம் 3:00 மணிக்கு, அருட்பா இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.நாளை காலை மற்றும் இரவு 8:00 மணிக்கு, ஏழு திரை நோக்கி அருட்பெரும் ஜோதி காட்சி வழிபாடு நடைபெறும். அன்று முழுதும் அகவல் உணர்ந்தோதுதல், சிறப்பு சொற்பொழிவு, வீணையில் அருட்பா இசை நிகழ்ச்சி, யோகா, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அன்னதானம் வழங்கப்பட உள்ளது.ஏற்பாடுகளை, ராமலிங்க சுவாமி கோவில் மடத்தின் பொறுப்பு தலைவர் ஜெகநாதன், நிர்வாக அறங்காவலர் தலைவர் கோபி (எ) கோபாலகிருஷ்ணன், துணை பொறுப்புத் தலைவர்கள் சரவணன், செல்வநாதன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.