உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கள்ளச்சாரயம் குடித்து இறந்தால் எதற்கு நிவாரணம் தரணும்?: பிரேமலதா துணிச்சலாக கேள்வி

கள்ளச்சாரயம் குடித்து இறந்தால் எதற்கு நிவாரணம் தரணும்?: பிரேமலதா துணிச்சலாக கேள்வி

கள்ளக்குறிச்சி: 'கள்ளச்சாரயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் என்பது தவறான முன்னுதாரணம். பின்விளைவுகளை தெரிந்தே சாராயம் குடிப்பவர்களுக்கு எதற்கு நிவாரணம் தர வேண்டும்' என தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா துணிச்சலாக கேள்வி எழுப்பி உள்ளார்.கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரை தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எந்த சம்பவம் நடை பெற்றாலும் அதிகாரிகள் தான் பலிகடா?. அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வது தான் நடவடிக்கையா?. கள்ளச்சாராயத்தைத் தடுக்க வேண்டிய முதல்வர், கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் என்று அறிவிக்கிறார். அப்படியென்றால் கள்ளச்சாராயத்தை முதல்வர் ஊக்குவிக்கிறாரா? இது தவறான முன்னுதாரணம்.அதிகாரிகளை மாற்றுவதோ, ரூ.10 லட்சம் கொடுப்பதோ இதற்குத் தீர்வல்ல. அரசும், போலீசாரும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கிறார்களே தவிர, தடுப்பதில்லை. தேர்தல் அரசியல் மட்டும் தான் தமிழகத்தில் நடக்கிறது. தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றுவேன் என திமுக வாக்குறுதி அளித்து இருந்தது. அது என்னவானது?. சிகிச்சையில் இருப்பவர்களிடம் எதற்காக இதைக் குடிக்கிறீர்கள் என்று கேட்டபோது, விலை மலிவாகக் கிடைத்ததால் குடித்தோம் என்றார்கள்.

கண்துடைப்பு

ஏற்கெனவே, மரக்காணம் போன்ற இடங்களில் இதேபோன்று கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தபோது, கள்ளச்சாராயத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால், இன்று இத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றால் இந்த அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது. அனைத்தும் கண்துடைப்பு நாடகம். முதல்வர் ஏன் இன்னும் இங்கு வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று மற்ற கட்சி தலைவர்கள் எல்லாம் கேட்கும் போது, பின் விளைவுகள் தெரிந்தே, கள்ளச்சாராயத்தை குடித்து இறந்தவர்களுக்கு மக்களின் வரிப்பணத்தை எதற்கு நிவாரணமாக தர வேண்டும் என பிரே மலதா துணிச்சலாக கேட்டுள்ளார்.அப்படி கொடுப்பது என்றால் ஆளும் கட்சியினர் தங்களது சொந்த பணத்தில் இருந்து கொடுக்க வேண்டியது தானே என்று பலரும் கேட்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

Rpalnivelu
ஜூன் 23, 2024 17:44

நவீன புரட்சி... இரண்டு தலைமுறைகள் வீணாகி விட்டது.


Phoenix
ஜூன் 21, 2024 12:30

சரியான கேள்வி .... இது போன்று நிவாரணம் வழங்குவது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். அரசே கள்ளச் சாராயத்தை ஊக்குவிப்பது போன் றாகிவிடும்.


Sesh
ஜூன் 21, 2024 11:17

இரும்புக்கரம் they have ordered last year but still not delivered.


அப்புசாமி
ஜூன் 21, 2024 11:03

என்ன மேடம் இப்பிடி கேக்குறீங்க. ரிவார்டு இருந்தால் தானே ரிஸ்க் எடுக்கமுடியும்?


venugopal s
ஜூன் 21, 2024 08:02

கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனவருக்கு நிவாரணம் கொடுக்கவில்லை. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர் செய்த தவறுக்காக அவர் குடும்பத்தினர், குழந்தைகள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்? அவர்கள் ஏன் நிராதரவாகி நடுத்தெருவுக்கு வர வேண்டும்? அவர்கள் மறுவாழ்வுக்காக அரசு நிவாரணம் கொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை!


பேசும் தமிழன்
ஜூன் 21, 2024 09:12

நாளை.... வேணு குடும்பத்துக்கும்... இதே போல நிதி கிடைக்கும் என்று.... இதற்க்கு முட்டு கொடுக்கிறார் போல் தெரிகிறது


நிக்கோல்தாம்சன்
ஜூன் 23, 2024 05:37

அந்த நிவாரணத்தை உங்க காப்போரேட் குடும்பத்தினரின் வருவாயில் இருந்து கொடுத்திருந்தா வரவேற்றிருப்பேன்


பேசும் தமிழன்
ஜூன் 21, 2024 07:30

உண்மை தான்..... எவன் அப்பன் வீட்டு பணம்.... உங்கள் தவறை மறைக்க.... மக்களின் வரிபணத்தை எடுத்து வீணடிப்பீர்களா ???


Sivakuamar Panneerselvam
ஜூன் 21, 2024 07:16

சரியான துணிச்சலான பேச்சு.


RAAJ68
ஜூன் 21, 2024 07:09

ஏம்மா நீங்கள் சந்தர்ப்பவாத அரசியல் செய்து திராவிட கட்சிகளிடம் இருந்து பெட்டி பெட்டியாக 500 கோடிகள் ஆயிரம் கோடிகள் வாங்கும் போது மனசாட்சி உறுத்த வில்லையா? உங்களிடம் என்ன இல்லை. அப்படியும் பணம் பணம் என்று பிசாசா அலைகிறீர்களே. குடிக்கிறவன் குடித்துவிட்டு செத்துப் போய் விட்டான் அவன் குடும்பம் நிர்க்கதியாக நிற்பதை பார்த்து இரக்கப்படா விட்டாலும் எதுவும் பேசாமல் கெளரவமாக இருங்கள்.


Kasimani Baskaran
ஜூன் 21, 2024 05:56

குடும்பத்தை காப்பாற்ற ஆள் இல்லாமல் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விட்டது. அவர்களை அப்படியே விட்டு விடுவது மனிதத்தன்மை அல்ல. ரத்தம் குடிக்க காத்திருக்கும் மதமாற்ற கோஷ்டிகள் விரைவாக களத்தில் இறங்குவர். இவர்கள் பட்டியலினத்தவர்கள் என்பதாலோ என்னவோ பலர் இது போல பொறுப்பற்ற முறையில் இந்தப்பிரச்சினையை கையாள்கிறார்கள். பாதிக்கப்பட்ட அணைத்து குடும்பங்களின் பிரச்சினைகளையும் தனித்தனியாக ஆய்வு செய்து வேண்டிய உதவிகளை நிச்சயம் அண்ணாமலை செய்வர் என்று எதிர்பார்க்கிறேன். சமூகப்பிரச்சினையை அரசியலாக்குவது திராவிட பாரம்பரியமாக இருக்கலாம் - ஆனால் அது சமுதாயத்தை குப்புறத்தள்ளி விடும்.


Thiruvengadam Ponnurangam
ஜூன் 21, 2024 05:46

ஊர் வாயை மூட பணமே போதும் என நினைக்கும் இவர்களின் நினைப்புக்கு மக்களாகிய நாம் தான் முழு காரணம். இதுதான் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் திருடன் கூட வெற்றிபெறலாம் என்ற நினைப்பை மக்களாகியாம் நாம் தான் அவர்களுக்கு கொடுத்துள்ளோம்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி