உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / குத்துச்சண்டை: காலிறுதியில் அங்குஷிதா

குத்துச்சண்டை: காலிறுதியில் அங்குஷிதா

பாங்காக்: பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச் சுற்றின் காலிறுதிக்கு இந்தியாவின் அங்குஷிதா (60 கிலோ), நிஷாந்த் தேவ் (71) முன்னேறினர்.தாய்லாந்தில், பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கான உலக தகுதிச் சுற்று நடக்கிறது. பெண்களுக்கான 60 கிலோ பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் அங்குஷிதா போரோ, கஜகஸ்தானின் ரிம்மா வோலோசென்கோ மோதினர். அபாரமாக ஆடிய அங்குஷிதா 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.பெண்களுக்கான 66 கிலோ பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அருந்ததி சவுத்தரி, போர்டோ ரிகோவின் ஸ்டெபானி பைனிரோ மோதினர். அபாரமாக ஆடிய 'நடப்பு தேசிய சாம்பியன்' அருந்ததி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.ஆண்களுக்கான 71 கிலோ பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் நிஷாந்த் தேவ் 5-0 என தாய்லாந்தின் பீரபத் யேசுங்நோனை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.ஆண்களுக்கான +92 கிலோ பிரிவு போட்டியில் இந்தியாவின் நரேந்தர் பெர்வால், ஈகுவடாரின் ஜெர்லோன் கில்மார் காங்கோ சாலா மோதினர். ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற நரேந்தர் 2-3 என அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

தங்கம் வென்றால் பரிசு

பாரிஸ் ஒலிம்பிக் தடகள போட்டியில் தங்கம் வென்றால் ரூ. 42 லட்சம் பரிசு வழங்கப்படும் என உலக தடகள கூட்டமைப்பு தெரிவித்தது. இந்த வரிசையில் சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (ஐ.பி.ஏ.,) இணைந்துள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் தங்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ. 42 லட்சம் பரிசு வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. மொத்தம் 13 எடைப்பிரிவுகளில் (ஆண்கள் 7, பெண்கள் 6) குத்துச்சண்டை போட்டி நடத்தப்படுகிறது. பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கு இந்தியா சார்பில் நிகாத் ஜரீன், பிரீத்தி, லவ்லினா தகுதி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை