மேலும் செய்திகள்
உலக விளையாட்டு செய்திகள்
03-Oct-2025
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
02-Oct-2025
உலக விளையாட்டு செய்திகள்
02-Oct-2025
புதுடில்லி: ''பாரிஸ் ஒலிம்பிக் போட்டி, இந்திய விளையாட்டில் திருப்புமுனை ஏற்படுத்தும். இனி நமக்கு வெற்றி மட்டுமே கிடைக்கும்,''என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் 117 பேர் பங்கேற்றனர். ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா (வெள்ளி), ஹாக்கியில் வெண்கலம், துப்பாக்கிசுடுதலில் மனு பாகர், சரப்ஜோத் சிங், ஸ்வப்னில் அசத்த 3 வெண்கலம், மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் ஒரு வெண்கலம் கைப்பற்ற, இந்தியாவுக்கு 6 பதக்கங்கள் கிடைத்தன. பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய நட்சத்திரங்கள் நேற்று முன் தினம் பிரதமர் மோடியை அவரது டில்லி இல்லத்தில் சந்தித்தனர். இவர்களிடம் மோடி கலந்துரையாடினார். இதன் 'வீடியோ' நேற்று வெளியிடப்பட்டது.பிரதமர் மோடி கூறுகையில்,''பாரிசில் சாதிக்க முடியாதவர்கள், 'ப்ளீஸ்' தோல்வியை மறந்துவிடுங்கள். நீங்கள் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். சில விஷங்களை கற்றுக் கொண்டு தாயகம் திரும்பியுள்ளீர்கள். விளையாட்டில் மட்டும் யாரும் தோற்பதில்லை. ஒவ்வொருவரும் பாடம் படிக்கின்றனர். பாரிஸ் ஒலிம்பிக் போட்டி, இந்திய விளையாட்டில் திருப்புமுனை ஏற்படுத்தும். இந்திய விளையாட்டின் எழுச்சிக்கு வழிவகுக்கும். இதற்கு பின் நமக்கு வெற்றி மட்டுமே கிடைக்கும். நமது வெற்றி வரலாறு தொடரும்.படை வீரர்கள்: வரும் 2036ல் ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தயாராகி வருகிறது. இதற்கு இந்திய வீரர், வீராங்கனைகளின் ஆலோசனை உதவும். பாரிஸ் ஒலிம்பிக் ஏற்பாடுகள், நிர்வாகம், வசதிகள் போன்றவற்றை கவனித்திருப்பார்கள். அவர்களது கருத்துக்களை குறித்து கொள்ள வேண்டும். சிறிய ஆலோசனைகள் கூட 2036, ஒலிம்பிக் பணிக்கு உதவும். ஒரு வகையில் நீங்கள் அனைவரும் '2036 ஒலிம்பிக்' போட்டிக்கான இந்திய படையின் வீரர்கள்,''என்றார்.சென்னுக்கு கோபமாபாட்மின்டன் ஒற்றையரில் நான்காவது இடம் பெற்ற இளம் வீரர் லக்சயா சென், நுாலிழையில் பதக்கத்தை நழுவவிட்டார். இவரிடம் பேசிய மோடி,''உங்களை முதன் முதலில் பார்த்த போது சின்னப் பையனாக இருந்தீர்கள். தற்போது வளர்ந்து விட்டீர்கள். நீங்கள் நட்சத்திர அந்தஸ்தை பெற்று விட்டீர்கள்...அது தெரியுமா?லக்சயா சென்: தெரியும் சார். பயிற்சியாளர் பிரகாஷ் படுகோனே எனது அலைபேசியை எடுத்து வைத்துக் கொண்டார். ஒலிம்பிக் போட்டி முடியும் வரை தர இயலாது என சொன்னதும் கோபம் வந்தது. பின் அவரது நல்ல நோக்கம் புரிந்தது. பாரிஸ் ஒலிம்பிக் சிறந்த பாடமாக அமைந்தது. பதக்கத்தை நெருங்கி பறிகொடுத்த போது, நெஞ்சம் தகர்ந்தது,'' என்றார்.மோடி: (சிரித்துக் கொண்டே): பிரகாஷ் சார் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார். ரொம்ப 'ஸ்டிரிக்ட்'. அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கும் அவரையே பயிற்சியாளராக அனுப்புவோம்.'ஏசி'க்கு சாபமாவீரர்கள் தங்குவதற்கான பாரிஸ் ஒலிம்பிக் கிராமம் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ப கட்டப்பட்டது. அறைகளில் 'ஏசி' வசதி செய்யப்படவில்லை. இயற்கையான காற்று வசதி, மின் விசிறி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. போட்டி நேரத்தில் பாரிசில் வெயில் கொளுத்த, இந்திய நட்சத்திரங்கள் பாதிக்கப்பட்டனர். உடனே இந்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் 40 'போர்ட்டபிள் ஏசி' அனுப்பி வைக்கப்பட்டது. பின் நமது நட்சத்திரங்கள் 'குளுகுளு' வசதியுடன் நிம்மதியாக துாங்கினர். இது பற்றி கேள்வி எழுப்பிய மோடி,''உங்களை வெப்பம் வாட்டியிருக்கும். மோடி பெரிதாக பேசுகிறார். அறையில் குறைந்தபட்சம் 'ஏசி' கூட இல்லையே. இப்போ என்ன செய்வது... என யார் எல்லாம் முதலில் அழுதீர்கள்... யார் எல்லாம் என்னை சபித்தீர்கள்...சொல்லுங்கள்,''என்றார்.இதற்கு யாருமே வாய் திறக்கவில்லை. அமைதியாக கடந்து சென்றனர்.இன்னும் விரோதமாபிரிட்டனுக்கு எதிரான காலிறுதியில் இந்திய ஹாக்கி வீரர் ரோஹிதாஸ் 'ரெட் கார்டு' காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் 10 பேருடன் விளையாட நேர்ந்தது. 'பெனால்டி ஷூட் அவுட்டில்' கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் கைகொடுக்க, 'திரில்' வெற்றி பெற்றது. இறுதியில் வெண்கலப்பதக்கம் வென்றது. இது குறித்து கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்கிடம் பேசிய மோடி,''பிரிட்டனுக்கு எதிராக 10 வீரர்களுடன் எப்படி போராடினீர்கள்... துவக்கத்தில் ஒரு வீரர் வெளியேற்றப்பட்டதால் மனஉளைச்சல் ஏற்பட்டிருக்குமே...?ஹர்மன்பிரித்: முதல் 15 நிமிடத்தில் ஒருவருக்கு 'ரெட் கார்டு' காட்டப்பட்டதால், கடின சூழ்நிலை ஏற்பட்டது. பயிற்சி குழுவினர் ஊக்கம் அளித்தனர். ஒலிம்பிக் போட்டியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அடுத்த என்ன நடக்கும் என்பதை ஒவ்வொரு நிமிடமும் கணித்து செயல்பட்டோம். பிரிட்டனுக்கு எதிராக என்றால், பகை உணர்வு அதிகமாக இருக்கும். 10 பேருடன் 42 நிமிடம் தாக்குப்பிடித்து வென்றது ஒலிம்பிக் வரலாற்றில் இது தான் முதன் முறை.மோடி: ஆம். பிரிட்டனுக்கு எதிராக கடந்த 150 ஆண்டுளாக போராட்டம் (மறைமுகமாக சுதந்திர போராட்டம்) தொடர்கிறது. வினேஷ் பெருமைபாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் 50 கிலோ பிரிவின் பைனலுக்கு வினேஷ் போகத் முன்னேறினார். பைனலுக்கு முன், 50 கிலோவைவிட 100 கிராம் எடை கூடியதால், தகுதி நீக்கம் செய்யப்பட்டார். வெள்ளிப்பதக்கம் கோரிய இவரது 'அப்பீலை' சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் நிராகரித்தது. இவருக்கு ஆறுதலாக, பிரதமர் மோடி கூறுகையில்,''ஒலிம்பிக் மல்யுத்த பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை வினேஷ் போகத். இது நாட்டு மக்கள் அனைவருக்கும் பெருமை அளிக்கும் விஷயம்,''என்றார்.
03-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025