| ADDED : ஆக 01, 2024 11:59 PM
பல்லாவரம்,:திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது, 52; ஜமீன் பல்லாவரம், லத்தீப் சாலையில், 'ஷா பர்னிச்சர்' என்ற பெயரில், ஷோபாக்களை விற்கும் கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் கடையை பூட்டிச் சென்றார். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.அவ்வழியாக சென்றோர், அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தெரிவித்தனர்.அவர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தாம்பரம், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து, தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். வாகனங்களில் இருந்து தண்ணீரை பீய்ச்சியடித்து, இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.மின் கசிவு காரணமாக, இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. விபத்து குறித்து, பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.