மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
3 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
3 hour(s) ago
சென்னை : கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் 63 மின்சார ரயில்களின் ரத்து, வரும் 18ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும், எழும்பூர் - புதுச்சேரி உட்பட எட்டு பயணியர் ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்படுகிறது.தாம்பரம் ரயில்வே பணிமனையில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால், விரைவு மற்றும் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில், ஏற்கனவே 63 மின்சார ரயில்கள் 15ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதை 18ம் தேதி வரையில் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 8 பயணியர் ரயில்
இது தவிர, எட்டு பயணியர் ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. l விழுப்புரம் - தாம்பரம், விழுப்புரம் - மேல்மருவத்துார், மேல்மருவத்துார் - சென்னை கடற்கரை பயணியர் ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்படுகின்றனl எழும்பூர் - புதுச்சேரி, புதுச்சேரி - எழும்பூர், கடற்கரை - மேல்மருவத்துார், மேல்மருவத்துார் - விழுப்புரம், தாம்பரம் - விழுப்புரம் ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்படுகிறது.இதனால், பயணியருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ஏற்கனவே அறிவித்தப்படி கடற்கரை - பல்லாவரம் - தாம்பரம், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே பயணியர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதேபோல, மீனம்பாக்கம் - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில், கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
3 hour(s) ago
3 hour(s) ago