உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தொழிற்சாலை வெளியேற்றும் கழிவுநீர் அரசு நிலத்தில் விடப்படுவதாக புகார்

தொழிற்சாலை வெளியேற்றும் கழிவுநீர் அரசு நிலத்தில் விடப்படுவதாக புகார்

செய்யூர், செய்யூர் அருகே சால்ட் ரோடு பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் செய்யும் நிறுவனத்தின் சிமென்ட் மற்றும்தார் கலவை தயார் செய்யும் தொழிற்சாலை உள்ளது.தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர், முறையான பராமரிப்பு இல்லாமல், அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் விடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது, மேலும், கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயமும் உள்ளதாக கூறப்படுகிறது.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, அரசு புறம்போக்கு நிலத்தில் கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ