| ADDED : ஜூலை 12, 2024 01:05 AM
மறைமலை நகர்:செங்கல்பட்டு -- காஞ்சி புரம் சாலை, 41 கி.மீ., தொலைவு உடையது. இந்த சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, 448 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகளாக பணிகள் நடந்து வருகின்றன.தற்போது, 75 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. வில்லியம்பாக்கம், திம்மாவரம், ஆத்துார்உள்ளிட்ட பகுதிகளில், சாலையின் மையத்தில் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கும் பணிகளும், பாலுார் பகுதியில் சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும்பணிகளும் நடந்து வருகின்றன.அதனால், இந்த சாலையின் மையத்தடுப்பு இருபுறமும், பல இடங்களில் காய்ந்த சிமென்ட் கலவைகள், மணல் குவியல் களாக காணப்படுகின்றன. இவை காற்றில் பறந்து, அவ்வப்போது வாகனஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன.இந்த சாலையின் நடுவே, திம்மாவரம், ஆத்துார், பாலுார் உள்ளிட்ட பகுதிகளில், குப்பை, விபத்தில் சிக்கிய வாகனங்களின் கண்ணாடி துகள்கள் போன்றவைசிதறிக்கிடக்கின்றன.மேலும், அதிக அளவிலான மணல் துகள்கள்பரவியுள்ளதால், அடிக்கடிவாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.