உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதுப்பட்டினத்தில் பயோ காஸ் ஆலை அமைக்க முடிவு

புதுப்பட்டினத்தில் பயோ காஸ் ஆலை அமைக்க முடிவு

புதுப்பட்டினம்:புதுப்பட்டினம் ஊராட்சி, அணுசக்தி துறையின்கல்பாக்கம் நகரியத்துடன் ஒருங்கிணைந்ததாக உள்ளது. 15 வார்டுகள் உள்ளன.புதுப்பட்டினம் பகுதியில் உள்ள காய்கறி, மீன், இறைச்சிக் கடைகளால், கழிவுகள் படிப்படியாக அதிகரிக்கிறது. அவற்றால்சுகாதார சீர்கேடு, துர்நாற்றம் ஏற்படுகிறது.இதை தவிர்க்க, கழிவுகளிலிருந்து பயோ காஸ் உற்பத்தி செய்யும் ஆலையை, அணு சக்தி துறை நிதியுதவியில் அமைக்க, ஊராட்சிநிர்வாகம் திட்டமிட்டுஉள்ளது.இதுகுறித்து, ஊராட்சித் தலைவர் காயத்ரி கூறியதாவது:புதுப்பட்டினம் ஊராட்சியில், காய்கறி உள்ளிட்ட கழிவுகளிலிருந்து பயோ காஸ் உற்பத்தி செய்யும்ஆலை அமைக்க முடிவெடுத்துள்ளோம். அதற்கு, 60 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அணுசக்தி துறையின் ஜி.எஸ்.ஓ., நிர்வாகத்திடம், ஊராட்சி சார்பில் நிதி கேட்டு, அவர்கள் அளிப்பதாக உறுதியளித்துள்ளனர். இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை