உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆலத்துார் ஏரியில் மண் எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு

ஆலத்துார் ஏரியில் மண் எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த ஆலத்துாரில், பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி மண் எடுத்து, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் நடைபெற்று வரும் கடல் நீரை குடிநீராக்கும் பணிக்காக பயன்படுத்த, அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு, தனியார் ஒப்பந்ததாரரிடம் 'டெண்டர்' விடப்பட்டுள்ளது.ஏரியில் மண் எடுக்கும் பணியை துவங்க பூமி பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கு, பொக்லை இயந்திரங்கள், லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.இதை அறிந்த அப்பகுதிவாசிகள், சம்பவ இடத்திற்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கு, விவசாய நிலங்கள் அதிக அளவில் உள்ளதாகவும், தற்போது, ஏரியில் 80 சதவீதம் மழை நீர் உள்ளதாகவும் கூறி, ஏரியில் மண் எடுக்க அப்பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.திருப்போரூர்- - திருக்கழுக்குன்றம் சாலை, பல ஆண்டுகளுக்கு பின் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் மண் அள்ளிச் செல்லும் கனரக வாகனங்கள் கடந்தால், இந்த சாலையும் நாசமாகிவிடும்.அதேபோல், சிறுதாவூர் - -ஆலத்துார் குறுகிய சாலையில் லாரி சென்றால் விபத்து ஏற்படும் எனவும் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மண் எடுக்கும் பணிகள், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மருதேரி ஏரியில் விதி விதிமீறல்

திருப்போரூர் ஒன்றியம், சிறுங்குன்றம் ஊராட்சி, மருதேரி கிராமத்தில் உள்ள ஏரி வாயிலாக, 300 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. இந்த ஏரியில் மண் அள்ள அரசு அனுமதி அளித்து, கடந்த 20 நாட்களுக்கு மேலாக, தொடர்ந்து மண் எடுக்கப்பட்டு வருகிறது.ஆனால், அரசு அனுமதித்த அளவை விட, அதிக ஆழத்திற்கு, தினமும் 10க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் வாயிலாக, 800க்கும் மேற்பட்ட லோடுகள் மண் அள்ளப்படுகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளில், சுற்றியுள்ள சென்னேரி, கரும்பாக்கம், தென்மேல்பாக்கம், ஆப்பூர் உள்ளிட்ட பல ஏரிகளில், அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், ஏரியில் அதிக அளவு ஆழம் தோண்டப்படுவதால், நிலத்தடி நீர் மட்டம் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் ஏரியை ஆய்வு செய்து, உரிய விதிகளிபடி மண் அள்ள உத்தரவிட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை