உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஏரியில் மூழ்கி ஒருவர் பலி

ஏரியில் மூழ்கி ஒருவர் பலி

கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி அடுத்த தைலாவரம் சாமுண்டீஸ்வரி நகர் பகுதியில் வசித்து வந்தவர் விவேகானந்தன், 43. இவருக்கு, இன்னும் திருமணம் ஆகவில்லை.வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம், கோவிலுக்கு செல்வதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறிவிட்டு சென்றார்.அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை 11:30 மணிக்கு ஏரியில் விவேகானந்தன் உடல் மிதந்தது.இது குறித்த புகாரின் அடிப்படையில், கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து சென்று, அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை