மேலும் செய்திகள்
சாலையோரம் காய்ந்த மரம் வாகன ஓட்டிகள் அச்சம்
3 hour(s) ago
திருவெண்காட்டீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
3 hour(s) ago
சமதளமற்ற ரயில்வே கேட் அரையப்பாக்கத்தில் அவதி
3 hour(s) ago
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பாலாற்றில் இருந்து, செங்கல்பட்டு நகராட்சி, ஒழலுார், மேலமையூர், ஆலப்பாக்கம் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு, குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பாலாற்றில் இருந்து பைப்லைன் வாயிலாக, செங்கல்பட்டு நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இச்சாலையில், செங்கல்பட்டு -- மதுராந்தகம் செல்லும் சாலையில், மலையடிவேண்பாக்கம் ஐ.டி.ஐ., அருகில், குடிநீர் பைப்லைன் உடைந்து, கடந்த சில தினங்களாக, தண்ணீர் வீணாக செல்கிறது.இதை சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். கோடைக்காலம் என்பதால், மக்களுக்கு அதிகமாக தண்ணீர் தேவைப்படும் சூழல் உள்ளது.அதனால், உடைந்த குழாய் இணைப்புகளை சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago