உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சுடுகாட்டில் பதுங்கி சதித்திட்டம் இருவர் கைது; 3 பேருக்கு வலை

சுடுகாட்டில் பதுங்கி சதித்திட்டம் இருவர் கைது; 3 பேருக்கு வலை

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த வா.ஊ.சி., நகர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக, செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, அந்த பகுதியில் சோதனையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பதுங்கியிருந்த ஜந்து பேர் போலீசாரை கண்டு தப்பியோட முயன்றனர்.இதில், இரண்டு பேரை போலீசார் பிடித்தனர். மற்ற மூன்று பேரும் தப்பியோடினர். இருவரிடமும் நடத்திய விசாரணையில், சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூரைச் சேர்ந்த கோகுல், 26, புதுபெருங்களத்தூர் முத்தமிழ்நகரைச் சேர்ந்த மணிகண்டன், 27, என்பது தெரியவந்தது.மேலும், இருவர் மீதும் மறைமலைநகர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. செங்கல்பட்டைச் சேர்ந்த ஒருவரை, நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ய சதித்திட்டம் திட்டியதும் தெரிய வந்தது.இதையடுத்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பிச் சென்ற மூன்று பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை