உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வண்டலுார்- - கேளம்பாக்கம் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை

வண்டலுார்- - கேளம்பாக்கம் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை

கூடுவாஞ்சேரி, : வண்டலுார் அண்ணா உயிரியல் பூங்கா சிக்னலில் இருந்து, கேளம்பாக்கம் செல்லும் நெடுஞ்சாலையில், காலை 7:00 மணி முதல் 11:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல், இரவு 10:00 மணி வரையும், கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து, தாம்பரம் கமிஷனர் உத்தரவிட்டுள்ளதாக, கூடுவாஞ்சேரி போலீசார் தெரிவித்தனர்.வண்டலுார் முதல் கேளம்பாக்கம் வரை உள்ள சாலையில், கல்லுாரி மற்றும் பல்கலைக்கழகங்கள், அரசு பள்ளிகள் அதிக அளவில் உள்ளன. இந்த சாலையில், கனரக வாகனங்கள் அதிவேகமாகவும், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படும் விதமாகவும் செல்வதாக புகார்கள் வந்தன.அதன் அடிப்படையில், இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, தொடர்ந்து நிகழும் விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ