உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கிறிஸ்துவ கல்லுாரியில் ஓட்டு எண்ணும் மையம்

கிறிஸ்துவ கல்லுாரியில் ஓட்டு எண்ணும் மையம்

தாம்பரம்:ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார், பல்லாவரம், ஆலந்துார், மதுரவாயல், ஆவடி ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.இத்தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையம், இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே இருந்தது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளதால், சட்டம் - ஒழுங்கை கருத்தில் கொண்டு, செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்துவ கல்லுாரியில், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையம் அமைக்கப்பட உள்ளது.இந்நிலையில், இக் கல்லுாரியில் ஓட்டு எண்ணும் மையம் அமைப்பதற்கான இடத்தை, கலெக்டர் ராகுல்நாத் நேற்று நேரில் ஆய்வு செய்தார். இம்மையத்திற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துமாறு, அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை