உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  கார்த்திகை தீப பண்டிகைக்கு அகல்விளக்கு தயாரிப்பு தீவிரம்

 கார்த்திகை தீப பண்டிகைக்கு அகல்விளக்கு தயாரிப்பு தீவிரம்

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில், கார்த்திகை தீப பண்டிகை வழிபாட்டிற்காக, பாரம்பரிய மண் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிவபெருமான், கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திர நாளில் அக்னியாக தோன்றி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அந்நாள், கார்த்திகை தீப பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் மலைக்குன்றில், அன்றைய நாளில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்படுகிறது. பக்தர்களும் வீடுகள் உள்ளிட்ட இடங்களில், மண் அகல்விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். வரும் டிச., 3ம் தேதி, கார்த்திகை தீப விழா கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, தற்போது பாரம்பரிய மண் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்து உள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் கூவத்துார் அடுத்த கடலுார், திருக்கழுக்குன்றம் அடுத்த ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில், மண்பாண்ட தொழிலாளர்கள், அகல் விளக்குகளை தயாரித்து வருகின்றனர். இதுகுறித்து, கடலுார் தொழிலாளர்கள் கூறும் போது,'களிமண் கிடைப்பது சிரமமாக இருந்தாலும், பாரம்பரிய தொழிலை செய்து வருகிறோம். அகல் விளக்குகளை, தலா ஒரு ரூபாய்க்கு, மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை