உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கழிப்பறை வசதி ஏற்படுத்த லாரி ஓட்டுனர்கள் கோரிக்கை

கழிப்பறை வசதி ஏற்படுத்த லாரி ஓட்டுனர்கள் கோரிக்கை

மதுராந்தகம்:சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில், நீண்ட துாரம் சரக்கு எடுத்துச் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் வெளியூர்களுக்கு பயணம் செல்வோர் ஓய்வு எடுக்க, வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டது.இரு மார்க்கத்திலும் அமைக்கப்பட்ட லாரி பார்க்கிங் பகுதியில் உள்ள கழிப்பறைகள், எப்போதும் பூட்டியே கிடக்கின்றன. இதனால், இயற்கை உபாதைகளுக்கு செல்ல, லாரி ஓட்டுனர்கள் மிகுந்த அவதி அடைகின்றனர்.மேலும், குடிப்பதற்கு தேவையான சுகாதாரமான குடிநீர் வசதி இல்லை. அதனால், விலை கொடுத்து பாட்டில் குடிநீர் வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளதாக, லாரி ஓட்டுனர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, லாரி ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை