உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 100 கிலோ மாவா பறிமுதல்

100 கிலோ மாவா பறிமுதல்

கோயம்பேடு,கோயம்பேடு சந்தையில், சந்தேகத்திற்கிடமாக நின்ற நபரிடம், கோயம்பேடு போலீசார் சோதனை செய்தனர்.இதில், மாவா பொட்டலங்கள் சிக்கின. விசாரணையில் பிடிபட்ட நபர், வடபழனியைச் சேர்ந்த பன்னீர், 45, என்பதும், அரும்பாக்கத்தில் தங்கியிருக்கும் பீஹாரைச் சேர்ந்த கிேஷார் குமார், 25, என்பவரிடம் மாவா வாங்கி விற்பனை செய்ததும் தெரிய வந்தது.இதையடுத்து, கிேஷார் குமார் தங்கி இருந்த, அரும்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இணைந்து சோதனை செய்தனர். இதில், 100 கிலோ மாவா பறிமுதல் செய்யப்பட்டு, அந்த வீட்டிற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை