உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மணலியில் 10,000 பேர் தேர்தல் புறக்கணிப்பு

மணலியில் 10,000 பேர் தேர்தல் புறக்கணிப்பு

மணலி, மணலி அடுத்த பெரியதோப்பு கிராமத்தில், 2,000 குடும்பங்களில், 10,000 ஓட்டுகள் உள்ளன. இங்குள்ள நிலத்திற்கு எந்த அங்கீகாரமும் இல்லை. மின்சார கட்டணம், தண்ணீர் வரி, வீட்டு வரி என, அனைத்து வரிகளும் கட்டி வருகின்றனர். ஆனால், பத்திரப்பதிவு செய்ய முடிய வில்லை.கலெக்டர் துவங்கி தமிழக அரசு வரை, பட்டா கோரி மனுக்கள் பல கொடுக்கப்பட்டன. நடவடிக்கை இல்லை. எனவே, லோக்சபா தேர்தல் உட்பட இனி வரும்அனைத்து தேர்தல்களிலும்ஓட்டு போடுவதில்லை என, அவர்கள் முடிவு செய்துள்ளனர். பெரியதோப்பு கிராம வ.உ.சி., பொதுநல டிரஸ்ட் தலைவர் ராமமூர்த்தி தலைமையில், நேற்று முன்தினம் இரவு கூட்டம் நடத்தி, தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது.இதுகுறித்து, சங்க செயலர் டில்லிபாபு கூறியதாவது:ஒவ்வொரு தேர்தல் வரும்போதும், நிலத்திற்கு பட்டா வாங்கி தரப்படும் என வாக்குறுதி அளிக்கின்றனர். பின் மறந்து விடுகின்றனர். வருவாய் ஆவணங்களில், அனாதீன நிலம் கிராம நத்தமாக மாற்றும் வரை, எந்த தேர்தலாக இருந்தாலும், 10,000 பேரும் ஓட்டு போடுவதில்லை என முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை