உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மழைக்கு முன் சாலையை சீரமைக்க ஆலந்துார் கவுன்சிலர்கள் கோரிக்கை

மழைக்கு முன் சாலையை சீரமைக்க ஆலந்துார் கவுன்சிலர்கள் கோரிக்கை

--ஆலந்துார், ஆலந்துார் மண்டலக்குழு கூட்டம், அதன் தலைவர் சந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. உதவி கமிஷனர் ஸ்ரீனிவாசன், மாநகராட்சி, மின் வாரிய, உணவு வழங்கல் துறை, சுகாதாரத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், கவுன்சிலர்கள் பேசியதாவது:நந்தம்பாக்கம் பகுதியின் சில இடங்களில் குடிநீர் கலங்கலாக வருகிறது. வார்டில், மின் வாரியம் தொடர்பான பிரச்னைகளை சீரமைக்க வேண்டும்.மழைநீர் வடிகாலில் அகற்றப்பட்ட கழிவுகள், பிளாஸ்டிக் பைகளில் போட்டு பல நாட்களாக வைக்கப்பட்டுள்ளது. அடிக்கடி பெய்து வரும் மழையால், பைகள் சேதமடைந்து மீண்டும் வடிகாலில் தஞ்சமடைகிறது. துார்வாரப்படும் கசடுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.நங்கநல்லுார், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கிளைகள் வெட்ட வேண்டும்.மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிந்த பகுதிகளில் உடனடியாக சாலைகளை சீரமைக்க வேண்டும்.பிரதான சாலைகளில் மெட்ரோ ரயில் பணி நடப்பதால், பல அகலமான தெருக்களை போக்குவரத்திற்கு வாகன ஓட்டிகள் பயன்படுத்துகின்றனர்.இதனால், விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. அதுபோன்ற சாலைகளில் வேகத்தடை அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.மண்டலக்குழு தலைவர் சந்திரன் பேசுகையில், ''மழைக்காலம் நெருங்குவதால் அனைத்து துறையினரும் உஷாராக இருக்க வேண்டும்.மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அடிக்கடி மழை பெய்வதால், சுகாதாரத்துறை, கொசு மருந்து அடிப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, 26 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை