உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை ஊசி விற்றவர் கைது

போதை ஊசி விற்றவர் கைது

புளியந்தோப்பு:புளியந்தோப்பு, தட்டான்குளம் பகுதியை சேர்ந்தவர் ‛கருப்பு' கோகுல், 22. இரண்டு ஆண்டுகளாக போதைக்கு அடிமையாகி இருந்த இவர், கடந்த 21ம் தேதி சுயநினைவின்றி கிடந்துள்ளார்.தட்டான்குளம் பொது கழிப்பறை அருகே மயங்கி கிடந்ததாக அவரது தாய் ஜானகியிடம் தெரிவித்து, நண்பர்கள் அவரை வீட்டில் சேர்த்துள்ளனர்.உடனடியாக, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது.போலீசாரின் விசாரணையில், கோகுல் நண்பர்கள் ஆறு பேருடன் சேர்ந்து போதை ஊசியை செலுத்தி வந்ததும், ஒரே ஊசியை இருவர் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.மேலும், இவர்களுக்கு பட்டாளத்தைச் சேர்ந்த கார்த்திக், 25, என்பவர், மும்பை சென்று மலிவான விலையில் போதை மாத்திரை மற்றும் ஊசி வாங்கி வந்து விற்றுள்ளார். கோகுல் இறப்பு தொடர்பாக, கார்த்திக் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை