உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குன்றத்துார் கோவில் மலைப்பாதை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்

குன்றத்துார் கோவில் மலைப்பாதை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்

குன்றத்துார், சென்னை, குன்றத்துார் மலை குன்று மீது சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். சுபமுகூர்த்த தினங்களில் கோவில் வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கின்றன. கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் மலைமீதுள்ள முருகனை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு செல்ல படிக்கட்டு பாதை மற்றும் மலை மீது தார் சாலை வசதியும் உள்ளது. படிக்கட்டு பாதையில் செல்ல முடியாதோர், தார் சாலையில் கார், ஆட்டோ, பைக் உள்ளிட்ட வாகனம் மூலம் சென்றடைகின்றனர்.இதனால், விசேஷ நாட்களில் சாலையில் நெரிசல் ஏற்படுகிறது. குறுகிய சாலை என்பதால், கார்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயலும் போது, சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து, விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது.எனவே, இந்த சாலையை இருவழிச்சாலையாக விரிவாக்கம் செய்து, சாலையோரம் இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், 'மலை மீதுள்ள சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டம் உள்ளது. இதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி