மேலும் செய்திகள்
இட்லி தட்டில் சிக்கிய சிறுவனின் விரல்
07-Nov-2025
சென்னை:சென்னை உயர் நீதிமன்றம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், அப்பகுதியைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி, இரண்டாம் வகுப்பு படித்துள்ளார். கடந்தாண்டு ஜூலை 7ம் தேதி பள்ளி முடிந்ததும், வீட்டிற்கு செல்ல சிறுமி ஆட்டோவில் ஏறியுள்ளார்.பள்ளியிலுள்ள மற்ற சிறுமியரை அழைத்துச் செல்ல ஆட்டோ டிரைவர் பள்ளிக்குள் சென்ற நேரத்தில், அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.இது குறித்து விசாரித்த உயர் நீதிமன்றம் அனைத்து மகளிர் போலீசார், பாரிமுனையைச் சேர்ந்த முருகன், 31, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில், குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், 'வாலிபருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம்' விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
07-Nov-2025