உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.3.30 லட்சம் வசூல் பணத்துடன் ஓடியவர் கைது

ரூ.3.30 லட்சம் வசூல் பணத்துடன் ஓடியவர் கைது

சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், ஐந்தாவது பிரதான சாலையில், 'ஸ்ரீ மாருதி எண்டர்பிரைசஸ்' என்ற, சமையல் காஸ் சிலிண்டர் ஏஜன்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் அசோக்குமார், 32 என்பவர், ஓட்டுனர் மற்றும் பணம் வசூலிப்பவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், 12 ஊழியர்கள் வசூலித்து கொடுத்த, 3.30 லட்சம் ரூபாயுடன் அசோக்குமார் தலைமறைவானதாக, ஜூன், 4ம் தேதி அபிராமபுரம் காவல் நிலையத்தில் இந்நிறுவனத்தின் மேலாளர் ராம்கி, 30 என்பவர் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று மதியம் நிறுவனத்திற்கு வந்த அசோக்குமார், விரைவில் பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து மேலாளர் ராம்கி அளித்த தகவலின் படி, அங்கு விரைந்த போலீசார், அசோக்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை