உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடையில் மாமூல் வசூலித்தவர் கைது

கடையில் மாமூல் வசூலித்தவர் கைது

சென்னை, திருவல்லிக்கேணி, டாக்டர் நடேசன் சாலை, இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் சம்சுல் ஹூதா, 36; ஐஸ்ஹவுஸ், ராம்நகர் இரண்டாவது தெருவில், பர்வீன் ஸ்டோர் எனும் கடை நடத்தி வருகிறார்.கடந்த மூன்று நாட்களாக, மர்ம நபர்கள் இவரது கடைக்கு வந்து மிரட்டி, 500 ரூபாய் மாமூல் வசூலித்துச் சென்றுள்ளனர்.இதுகுறித்து நேற்று, ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த மாதேஷ், 20, நவீன், 23, ஆகிய இருவரும் மாமூல் வசூலில் ஈடுபட்டது தெரிந்தது.நேற்று மாதேஷை கைது செய்த போலீசார், நவீனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை