உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அசாம் வீரர்களின் தந்தை மாரடைப்பால் மரணம்

அசாம் வீரர்களின் தந்தை மாரடைப்பால் மரணம்

பள்ளிக்கரணை, மேடவாக்கம் அடுத்த பள்ளிக்கரணை, ரேடியல் சாலையில் உள்ள அசாம் பவனில் தங்கியிருந்த, 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் திடீரென உயிரிழந்ததாக பள்ளிக்கரணை போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரித்தபோது, அசாம் மாநிலத்தை சேர்ந்த குணால் பேகு, 50, என்பதும், மாரடைப்பால் அவர் உயிரிழந்ததும் தெரிய வந்தது.குணால் பேகுவின் இரு மகன்கள், சென்னையில் நடக்கும் 'கேலோ இந்தியா' நீச்சல் போட்டியில், அசாம் மாநிலம் சார்பில் பங்கேற்க வந்துள்ளனர். தன் மகன்களின் ஆட்டத்தை நேரில் காண்பதற்காக, அசாமிலிருந்து வந்த குணால் பேகு, பள்ளிக்கரணை அசாம் பவனில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை