| ADDED : நவ 20, 2025 03:15 AM
கூவத்துார்: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த பேரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அழகேசன், 50; கூவத்து ார் காவல் நிலையத்தில் தலைமை காவலர். நேற்று மா லை 4:30 மணிக்கு கிழக்கு கடற்கரை சாலையில் 'பேஷன் ப்ரோ' இருசக்கர வாகனத்தில் ரோ ந்து பணியில் ஈடுபட்டபோது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக சென்ற, 'இனோவா' கார், இருசக்கர வாகனத்தின் பி ன்புறத்தில் மோதியது. இதில் தலை யில் பலத்த காயமடைந்த அழகேசன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கூவத்துார் போலீசார் அழகேசன் உடலைகைப்ப ற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.