உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  யாழ்ப்பாணம் விமானம் ரத்து திருமா உட்பட 136 பேர் தவிப்பு

 யாழ்ப்பாணம் விமானம் ரத்து திருமா உட்பட 136 பேர் தவிப்பு

சென்னை: இலங்கையில் நிலவிய மோசமான வானிலையால், அங்கே தரையிறங்க முடியாமல் சென்னைக்கு திரும்பிய விமானத்தால், வி.சி., தலைவர் திருமாவளவன் உட்பட 136 பேரின் பயணம் தடைபட்டது. சென்னையில் இருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் நோக்கி, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம், 72 பயணியருடன் நேற்று காலை 10:30 மணிக்கு புறப்பட்டது. யாழ்ப்பாணத்திற்கு 11:45 மணிக்கு விமானம் சென்றடைய வேண்டிய நிலையில், அங்கு நிலவிய மோசமான வானிலையால், திருச்சியில் விமானம் தரையிறக்கப்பட்டது. மாலை 3:30 மணியாகியும் இயக்கப்படாததால், ஆத்திரமடைந்த பயணியர், விமானத்திலேயே கடும் கோஷம் எழுப்பினர். இதையடுத்து அந்த விமானம், சென்னை விமான நிலையத்திற்கு மாலை 5:00 மணிக்கு வந்தடைந்தது. 'யாழ்ப்பாணம் பயணம் ரத்து செய்யப்பட்டது. இதே டிக்கெட்டை வைத்து, மற்றொரு நாளில் பயணம் செய்யலாம்' என இண்டிகோ ஏர்லைன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ளாத பயணியர், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காலை 8:00 மணி முதலே 72 பயணியர் காத்திருந்து அவதிப்பட்டனர். அதேபோல், யாழ்ப்பாணம் விமான நிலையத்தில், சென்னை வருவதற்காக வி.சி., தலைவர் திருமாவளவன் உட்பட 64 பயணியர், நாள் முழுதும் காத்திருந்து அவதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை