உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வரிசைகட்டி நிற்கும் லாரிகள் வாகன ஓட்டிகள் திணறல்

வரிசைகட்டி நிற்கும் லாரிகள் வாகன ஓட்டிகள் திணறல்

மேடவாக்கம், மேடவாக்கம் மேம்பாலத்தின் கீழ், பொது போக்குவரத்துக்கு இடையூறாக, செங்கல் லாரிகள் வரிசைகட்டி நிற்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்கின்றனர்.தவிர, இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால், இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருக்கும் லாரிகள் மீது மோதி விபத்துக்களை சந்திப்பதும் அடிக்கடி நிகழ்கிறது.மேம்பாலத்தின் கீழே லாரிகள் உள்ளிட்ட எந்த தனியார் வாகனத்தையும் நிறுத்தக்கூடாது என, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் கடந்த மாதம் உத்தரவிட்டும், தொடர்ந்து லாரிகள் நிறுத்தப்பட்டு வருகின்றன.பொது போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்துக்களை ஏற்படுத்தும் விதமாகவும், பாலத்தின் கீழே லாரிகளை நிறுத்த அனுமதிக்க கூடாது. மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை