உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

குன்றத்துார்:தாம்பரம் அருகே மணிமங்கலம் அடுத்த ஆதனுாரைச் சேர்ந்தவர் கலையரசன், 25; கார் ஓட்டுனர். போதை பழக்கத்திற்கு அடிமையான இவர், இரு தினங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறினார்; பின் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் கலையரசனை தேடி வந்தனர்.இந்நிலையில், ஆதனுாரில் உள்ள கால்வாயில் அவரது உடல் மிதந்தது. மணிமங்கலம் போலீசார் நேற்று முன்தினம் இரவு உடலை மீட்டனர். போதையில் கால்வாயில் தவறி விழுந்து, கலையரசன் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை