உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.10,000 லஞ்சம் வரி வசூலிப்பாளர் கைது

ரூ.10,000 லஞ்சம் வரி வசூலிப்பாளர் கைது

சென்னை, தரமணி, எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் தீபா, 40. இவர், தன் ஓட்டு வீட்டை கான்கிரீட் வீடாக மாற்றினார்.சொத்து வரி நிர்ணயம் செய்ய, மாநகராட்சியில் விண்ணப்பித்தார். பரிசீலித்து நடவடிக்கை எடுக்க, வரி வசூலிப்பாளர் சரவணன் 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து தீபா, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். நேற்று, போலீசார் மாறு வேடத்தில் தீபாவுடன் சென்றனர். சரவணனிடம், ரசாயனம் கலந்த 10,000 ரூபாயை தீபா கொடுத்தார். அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக சரவணனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை