உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழைய பஸ் ஸ்டாண்டில் குழியால் விபத்து அபாயம்

பழைய பஸ் ஸ்டாண்டில் குழியால் விபத்து அபாயம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் பழநி பஸ்கள் வெளியேறும் பகுதியில், குழியாக உள்ளதால் விபத்து ஏற்படுகிறது.பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, கோவை, திருப்பூர், பழநி உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ்சில் பயணிக்க தினமும், ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், பழைய பஸ் ஸ்டாண்டில் பழநி பஸ்கள் வெளியேறும் பகுதியில் பெரிய பள்ளம் உள்ளதால், விபத்துகள் ஏற்படுகிறது.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பழைய பஸ் ஸ்டாண்டில், பழநி பஸ் வெளியேறும் பகுதியில், பள்ளம் உள்ளதால் பஸ்கள் பழுதாகும் வாய்ப்புள்ளது. பயணியர் கவனமின்றி வந்தால் கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும், மழைநீர் தேங்கி நிற்பதால், கடக்க முற்படுவோர், விபத்துக்குள்ளாகின்றனர். குழியில் பல நாட்களாக தேங்கும் மழைநீரால் சுகாதாரம் பாதிக்கிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகம், உரிய நடவடிக்கை எடுத்து, ஓடுதளத்தை பராமரிக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை