உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சர்வதேச கராத்தே போட்டி யில் கோவை மாணவர்கள் பதக்கம் 

சர்வதேச கராத்தே போட்டி யில் கோவை மாணவர்கள் பதக்கம் 

கோவை:இலங்கையில் நடந்த சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில், கோவை மாணவர்கள் பதக்கம் வென்றனர். சர்வதேச அளவிலான கராத்தே போட்டி, இலங்கையில் நடந்தது. இதில் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, கத்தார் உள்ளிட்ட ஒன்பது நாடுகளில் இருந்து, 900க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற, கோவை ஸ்ரீ விஜய வித்யாலயா துவக்க பள்ளியில் படிக்கும் அவந்திகா, 9 வயதுக்கு உட்பட்ட மாணவியர் கட்டா பிரிவில் வெள்ளியும், 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் கட்டா பிரிவில் தக்க்ஷித் வெண்கல பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் கிருஷ்ணன் செயலாளர் ரேகா, தலைமை ஆசிரியை பிரேமா, கராத்தே பயிற்சியாளர் வரதராஜன் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி