கோவை:இன்ஜி., மாணவர்களுக்கான கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சி.ஐ.டி., கல்லுாரியை வீழ்த்தி, சக்தி கல்லுாரி அணி சாம்பியன் கோப்பையை வென்றது. சி.ஐ.டி., கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில், மூன்றாம் ஆண்டு 'டாக்டர் எஸ்.ஆர்.கே பிரசாத் நினைவு அலுமினி கோப்பை' விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாணவ மாணவியருக்கு பூப்பந்து, கபடி, கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து, கிரிக்கெட், தடகளம்,டேபிள் டென்னிஸ், செஸ், கோ கோ, ஹேண்ட்பால், டென்னிஸ், ஹாக்கி, த்ரோபால் ஆகிய போட்டிகள் நடந்தன. இதன் கிரிக்கெட் போட்டியில், 16 அணிகள் பங்கேற்று நாக் அவுட் முறையில் போட்டியிட்டன. இறுதிப்போட்டியில், சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் சி.ஐ.டி., கல்லுாரி அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த, சக்தி கல்லுாரி அணியினர் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் மட்டுமே எடுத்தனர். சி.ஐ.டி.,யின் சஞ்சீவ், அகிலன் ஆகியோர் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினர். கோப்பையை வெல்ல 83 ரன்கள் தான் தேவை, என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய 33 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் சக்தி கல்லுாரி அணி வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றியது. கபடி
நாக் அவுட் முறையில் நடந்த கபடி போட்டியில், 27 கல்லுாரி அணிகள் பங்கேற்று போட்டியிட்டன. இரண்டாம் சுற்றுப்போட்டியில், சி.ஐ.டி., 'ஏ' அணி 25 - 9 என்ற புள்ளிக்கணக்கில் தானிஸ் அகமது அணியையும், சி.ஐ.டி., 'பி' அணி 24 - 22 என்ற புள்ளிக்கணக்கில் பி.எஸ்.ஜி., அணியையும், சி.ஐ.டி., அலுமினி அணி 28 - 19 குமரன் கல்லுாரியையும், கே.கே.ஐ.டி., கல்லுாரி அணி 18 - 16 என்ற புள்ளிக்கணக்கில் பார்க் கல்லுாரி அணியையும் வீழ்த்தின.