உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மது அருந்திய போது புரை ஏறி இளம் அரசு டாக்டர் உயிரிழப்பு

மது அருந்திய போது புரை ஏறி இளம் அரசு டாக்டர் உயிரிழப்பு

கோவை:ஆந்திர மாநிலம், கடப்பா, ராமபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷேக் முகமது குப்லே, 27; அரசு டாக்டரான இவர், கோவை அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து வந்தார். கடந்த, 6ம் தேதி பணி முடிந்து வீடு திரும்பிய ஷேக் முகமது குப்லே, மது அருந்தினார். அப்போது திடீரென வாந்தி எடுத்து மயங்கினார். வாந்தி எடுத்த போது அவருக்கு புரை ஏறியது.அவரது மனைவி சைலாபானு, அருகிலிருந்தவர்கள் உதவியுடன் ஷேக் முகமது குப்லேவை, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி ஷேக் முகமது குப்லே உயிரிழந்தார்.அவரது தாய் ஷேக் ரிஸ்வானா புகாரில், ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை