உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாயிகளுக்கு விதை வினியோகம்

விவசாயிகளுக்கு விதை வினியோகம்

மேட்டுப்பாளையம் : தோட்டக் கலைத்துறை சார்பில், விவசாயிகளுக்கு காய்கறி மற்றும் கீரை வகை விதை பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.மேட்டுப்பாளையம் ஊமப்பாளையத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில், காரமடை வட்டார தோட்டக் கலைத்துறை சார்பில், ஸ்டால் அமைக்கப்பட்டிருந்தது. இதை மாவட்ட வருவாய் அலுவலர் கற்பகம் திறந்து வைத்தார். தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வசந்தி வரவேற்றார். ஆடிப் பட்டத்தில் விதைக்க வேண்டிய காய்கறி, கீரை விதை பாக்கெட்டுகளை 50 விவசாயிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தோட் டக்கலைத்துறை துணை அலுவலர் பழனிசாமி, உதவி வேளாண் அலுவலர்கள் ரவி, சண்முகம், தேவன், சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை