உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாய்க்காலில் விழுந்து குட்டியானை பலி

வாய்க்காலில் விழுந்து குட்டியானை பலி

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே வாய்க்காலில் விழுந்து குட்டி யானை உயிரிழந்தது.மேட்டுப்பாளையம் வனச்சரகம், கல்லாறு பீட் செம்ஸ்போர்டு எஸ்டேட் பகுதியில் வனவர் சீனிவாசன், வனக்காப்பாளர் கந்தசாமி, வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாய்க்காலில் உடல் மெலிந்த நிலையில் 3 வயது ஆண் குட்டி யானை இறந்து கிடந்ததை கண்டு, ரேஞ்சர் தன்னப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை கால்நடை டாக்டர் மனோகரன் மற்றும் வனத்துறையினர் யானையை பிரேத பரிசோதனை செய்தனர். உடல் நலம் பாதித்த குட்டி யானை தண்ணீர் குடிக்க வந்த போது வாய்க்காலில் விழுந்து இறந்திருக்கலாம் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை