உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாரியம்மன் கோவிலில் வரும் 20ல் கும்பாபிஷேகம்

மாரியம்மன் கோவிலில் வரும் 20ல் கும்பாபிஷேகம்

நெகமம்;நெகமம், செங்குட்டைபாளையம் மாரியம்மன் கோவிலில், வரும் 20ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.நெகமம், செங்குட்டைபாளையத்தில், புகழ் பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக விழா வரும் 19ம் தேதி துவங்குகிறது.இதில், அன்று மாலை, 5:30 மணிக்கு, மங்கள இசை நடக்கிறது. தொடர்ந்து, 6:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, புண்யாகம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், ரக் ஷா பந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷனம், முதல் கால யாக பூஜை, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.வரும் 20ம் தேதி, காலை, 7:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனை மற்றும் யாத்ரா தானம் நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு, விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.தொடர்ந்து காளியம்மன், மாரியம்மன், கன்னிமார் சுவாமிகளுக்கு, மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில், செங்குட்டைபாளையம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களைச்சேர்ந்த மக்கள் திரளாக பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை