| ADDED : மார் 16, 2024 11:44 PM
கோவை பீளமேட்டில் உள்ள கஸ்துாரி சீனிவாசன் ஆர்ட் கேலரியில், 'ரிதம் பேலட்' என்ற ஓவியம் மற்றும் சிற்பக்கண்காட்சி நடந்து வருகிறது.கண்காட்சியில் ஓவியர்கள் திருநாவுக்கரசு, பிரியா இளையராஜா, சிவபாலன், சிற்பி ஆரோக்கியராஜ், குரு பிரசாத் மற்றும் அமுதன் ஆகிய ஆறு ஓவியர்கள் வரைந்த, 60 ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் இடம் பெற்றள்ளன.தமிழக அரசு ஓவியக்கல்லுாரிகளில், முதுகலை நுண்கலை ஓவியம் பயின்ற இந்த ஓவியர்களின் படைப்புகள், தேசிய மற்றும் சர்வதேச ஓவிய கண்காட்சிகளில் இடம் பெற்று, பாராட்டு மற்றும் பரிசுகள் பெற்றுள்ளன.திருநாவுக்கரசின் ஆடு மற்றும் ஆடு மேய்ப்பர்கள் குறித்த நவீன பாணி ஓவியங்கள், சிவபாலனின் ஜல்லிக்கட்டு ஓவியங்கள், பிரியா இளையராஜாவின் பெண்களில் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் ஓவியங்கள், மீனவர்களின் வாழ்வியலை சித்தரிக்கும், சிற்பி ஆரோக்கிய ராஜின் உலோக சிற்பங்கள், குருபிரசாத் மற்றும் அமுதன் ஆகியோரின் நீர் வண்ண ஓவியங்கள் பார்வையாளர்களை அதிகம் கவர்கின்றன.இந்த கண்காட்சியை இன்று மாலை 6:30 மணி வரை கண்டு ரசிக்கலாம்.