உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய கராத்தே; சாதித்த அன்னுார் வீரர்

தேசிய கராத்தே; சாதித்த அன்னுார் வீரர்

அன்னூர்:தேசிய அளவிலான கராத்தே போட்டியில், அன்னூர் வீரர் தங்கம் வென்றுள்ளார்.உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில், தேசிய அளவிலான 33வது கராத்தே போட்டி, கியாகுஷின் கராத்தே பவுண்டேஷன் சார்பில், கடந்த வாரம் இரண்டு நாட்கள் நடைபெற்றது.இதில் தமிழகத்திலிருந்து அன்னூரைச் சேர்ந்த சுனில் குமார் மற்றும் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்த வீரர் என இருவர் பங்கேற்றனர்.அன்னூர் வீரர் சுனில் குமார், 18 வயதுக்கு மேற்பட்ட பிரிவில், 60 கிலோ எடை வரையிலான பிரிவில் பங்கேற்றார். இதில் முதலிடம் பெற்று, தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.இந்த வீரர் ஏற்கனவே 2017ல், இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான கராத்தே போட்டியில் 2ம் இடம் பெற்று, வெள்ளி பதக்கம் வென்றார்.தங்கப்பதக்கம் வென்ற சுனில்குமாருக்கு, மேட்டுப்பாளையத்தில் நீலகிரி எம்.பி., ராசா கவுரவித்து நிதி உதவி வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், தி.மு. க., மாவட்ட செயலாளர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தங்கப்பதக்கம் வென்ற வீரர் சுனில் குமாருடன், பயிற்சியாளர் ஞானபண்டிதன், கோவை எம்.எம்.ஏ., ஜிம் நிர்வாகிகள், ஆகியோருக்கும், பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை