உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போக்குவரத்து நெரிசலை குறைக்க பவானி ஆற்றில் புதிய பாலம்

போக்குவரத்து நெரிசலை குறைக்க பவானி ஆற்றில் புதிய பாலம்

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்று பாலத்தின் அருகில் புதிய பாலம் கட்டுவதற்கான திட்ட ஆய்வறிக்கை தயாரிப்பதற்கான டெண்டர் ஓரிரு வாரங்களுக்குள் விடப்படும் என மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.கோவை மாவட்டத்தில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரி மாவட்டம் செல்வதற்கும், நீலகிரி வழியாக கர்நாடகா, கேரளா மாநிலம் செல்வதற்கும் பவானி ஆற்று பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.இவ்வுளவு முக்கியத்துவம் வாய்ந்த பவானி ஆற்று பாலம் கொஞ்சம் கொஞ்சமாக தன் பலத்தை இழந்து வருகிறது. பாலத்தின் இருபுறங்களிலும் உள்ள தடுப்பு சுவர்கள் சேதமடைந்துள்ளது.நீலகிரி மாவட்டம் ஊட்டி, கேத்தி, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறிகள், உருளை கிழங்கு, பூண்டு போன்றவற்றை ஏற்றி கொண்டு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் இந்த பாலத்தை கடக்கின்றன. கனரக வாகனங்கள் இந்த பாலத்தில் செல்லும் போது, அதிர்வு ஏற்படுகிறது. மேலும் பாலம் இருவழிச்சாலையாக உள்ளதால், விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில் ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள், உள்ளூர் வாசிகள் என அனைவரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.பவானி ஆற்றில் புதிய பாலம் கட்டப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பவானி ஆற்றில் தற்போது உள்ள கான்கிரீட் பாலத்திற்கு அருகிலேயே புதிய ஆற்று பாலம் கட்ட மாநில நெடுஞ்சாலை துறை முடிவு செய்தது. இதற்கான திட்ட ஆய்வறிக்கைக்கான டெண்டர் விடப்பட உள்ளன.இதுகுறித்து, மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இதற்கான திட்ட ஆய்வறிக்கைக்கான டெண்டர் ஓரிரு வாரங்களுக்குள் விடப்படும். ஆய்வறிக்கையை பொறுத்து பாலத்தின் கட்டுமான பணிகளுக்கான டெண்டர் அதன் பின் விடப்படும், என்றார்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை