| ADDED : மார் 17, 2024 11:42 PM
பாலக்காடு:பா.ஜ.,வின் லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடியின் 'ரோடு ஷோ' பாலக்காட்டில் நாளை (19ம் தேதி) நடக்கிறது.கேரள மாநிலம் பாலக்காடு நகரில், கோட்டை மைதானம் அருகே உள்ள ஐந்து விளக்கு பகுதியில் இருந்து தொடங்கும் பிரதமர் 'ரோடு ஷோ', சுல்த்தான்பேட்டை வழியாக பாலக்காடு தலைமை தபால் நிலையம் அருகே நிறைவு பெறும்.காலை, 10:00 மணிக்கு இந்நிகழ்ச்சி துவங்கு கிறது. கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு வரும் பிரதமர், பாலக்காடு மெர்சி கல்லுாரி மைதானத்துக்கு வந்தடைகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக கோட்டை மைதானம் வருகிறார். தொடர்ந்து ரோடு ஷோவில் பங்கேற்கிறார்.மெர்சி கல்லுாரி மைதானம், கோட்டை மைதானம் கிரிக்கெட் கிரவுண்ட், கட்டடங்கள், ரோட் ஷோ நடக்கும் சாலையோர பகுதிகள் என அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடந்தது.