உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துாய்மை பணியாளர்கள் போராட்டம்

துாய்மை பணியாளர்கள் போராட்டம்

கோவை;உடையாம்பாளையம் பகுதியில், பணிச்சுமையை கூட்டுவதாக கூறி துாய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாநகராட்சி கிழக்கு மண்டலம், 50வது வார்டு உடையாம்பாளையம் பகுதியில் தற்காலிக துாய்மை பணியாளர்கள் நேற்று காலை, துாய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை, 7:30 மணியளவில் எட்டுக்கும் மேற்பட்டோர், திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள், பணிச்சுமையை கூட்டுவதாகக்கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, போராட்டம் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை