உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இலங்கை கைதியிடம் கஞ்சா: போலீசார் தீவிர விசாரணை

 இலங்கை கைதியிடம் கஞ்சா: போலீசார் தீவிர விசாரணை

கோவை: இலங்கை கொழும்புவை சேர்ந்தவர் நளின் சந்திரங்கா, 43. இவர் சென்னை மத்திய சிறை, 2ல் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது, கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு ஒன்றை பதிந்துள்ளனர். இதுகுறித்த விசாரணைக்காக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் நேற்று முன்தினம் இரவு கோவை அழைத்து வந்தனர். அவரை கோவை மத்திய சிறையில் அடைக்க, போலீசார் அழைத்து சென்றனர். அப்போது அங்கு பணியில் இருந்த பாதுகாவலர்கள், நளின் சந்திரங்காவை சோதனை செய்தனர். அவரது சட்டை பாக்கெட்டில் கஞ்சா இருந்தது. இதுகுறித்து கேட்ட போது நளின் சந்திரங்கா முறையாக பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து சிறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர். சிறை வார்டன் அளித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை