உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சியில் வரியினங்கள் வசூல் வேட்டை!இன்னும் ரூ.532 கோடி பாக்கி;குறுக்கே நிற்கிறது தேர்தல் பணி

மாநகராட்சியில் வரியினங்கள் வசூல் வேட்டை!இன்னும் ரூ.532 கோடி பாக்கி;குறுக்கே நிற்கிறது தேர்தல் பணி

கோவை;நடப்பு நிதியாண்டு நாளையுடன் நிறைவடையும் நிலையில், இதுவரை ரூ.593.97 கோடி என, 52.72 சதவீதம் மட்டுமே வரியினங்கள் வசூலாகியுள்ளது. இன்னும் ரூ.532.61 கோடி வசூலிக்க வேண்டியுள்ள நிலையில், தேர்தலால் தொய்வு ஏற்பட்டுள்ளது.கோவை மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட வரியினங்கள் வாயிலாக பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.மொத்தம், 5.68 லட்சம் வரி விதிப்புதாரர்கள் உள்ள நிலையில், நடப்பு, 2023-24ம் நிதியாண்டு நாளையுடன்(31ம் தேதி) முடிவடைகிறது.எனவே, வரி வசூலர்கள் வாயிலாக ஏற்கனவே, 100 வார்டுகளிலும் வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.தவிர, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் வாயிலாக வசூல் நடந்து வருகின்றன. அதிக வரித்தொகை நிலுவை வைத்துள்ள கட்டடங்களின் முன், எச்சரிக்கை 'பிளக்ஸ் பேனர்' வைத்து, வசூல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.சொத்து வரிநேற்று மாலை வரை சொத்து வரி ரூ.405.87 கோடி வசூலாகியுள்ளது; இன்னும், ரூ.121.98 கோடி வரவேண்டியுள்ளது. தொழில் வரி ரூ.55.1 கோடி வசூலாக, ரூ.22.93 கோடி வரவேண்டியுள்ளது. காலியிட வரி ரூ.36.44 கோடி வசூலாகியுள்ளது; ரூ.191.73 கோடி வசூலாக வேண்டியுள்ளது.குடிநீர் கட்டணம்அதேபோல், குடிநீர் கட்டணம் ரூ.52.41 கோடி வசூலாகியுள்ளது; ரூ.36.81 கோடி வரவேண்டியுள்ளது. பாதாள சாக்கடை கட்டணம் ரூ.12.74 லட்சம் வசூலாகியுள்ளது; இன்னும் ரூ.99.6 கோடி வசூலாக வேண்டியுள்ளது. இதர வரியினங்களும் சேர்த்து, மொத்தம் ரூ.593.97 கோடி இதுவரை வசூலாகியுள்ளது.இன்னும், 532.61 கோடி வசூலிக்க வேண்டியுள்ளது. நாளையுடன் நடப்பு நிதியாண்டு முடிவடையும் நிலையில், 52.72 சதவீத வரியினங்களே வசூலாகியுள்ளன.இன்னும், 47.28 சதவீதம் வரி வரவேண்டியுள்ள நிலையில், வரி வசூலர்கள் வீடு, வீடாக சென்று வரியினங்களை உடனடியாக செலுத்துமாறு, வலியுறுத்தி வருகின்றனர். மொபைல் போனில் தொடர்பு கொண்டும் வசூலை தீவிரப்படுத்தியுள்ளனர்.தேர்தலால் தொய்வு!மாநகராட்சி வருவாய் பிரிவினர் கூறுகையில், 'லோக்சபா தேர்தல் பணியில், வரி வசூலர் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். இதனால், வசூலில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பின்புதான், மீண்டும் வசூல் சூடுபிடிக்கும்' என்றனர்.

இதுவும் காரணம்!

வரி வசூலர்கள் கூறுகையில், 'எஸ்.யூ.சி., எனும் சேவை பயன்பாட்டு கட்டணம், சொத்து வரியை விட பல மடங்காக வருகிறது. குடியிருப்புகளுக்கு ஒரு கட்டணம் என்றால் , தொழிற்சாலைகளுக்கு அதைவிட அதிகம். இதனால், ஒழுங்காக வரி செலுத்தி வந்தவர்களும் செலுத்த தயங்குகின்றனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை