உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மீன் உலர்த்தும் தளம் முதுநகரில் திறப்பு விழா

மீன் உலர்த்தும் தளம் முதுநகரில் திறப்பு விழா

கடலுார், : கடலுார் முதுநகர் சுனாமி நகர் மற்றும் அக்கரைகோரியில் ரூ. 4.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வலை பின்னும் கூடம், மீன் உலர்த்தும் தளம் திறப்பு விழா நடந்தது.சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து, அக்கரைகோரியில் நடந்த நிகழ்ச்சியில் அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினர். மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேல்முருகன் வரவேற்றார்.அப்போது, மீன்வளத்துறை ஆய்வாளர் அஞ்சனா தேவி, தி.மு.க., மாணவரணி அமைப்பாளர் பாலாஜி, மண்டல குழு தலைவர் இளையராஜா, கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், முன்னாள் ஊராட்சி தலைவர் சுதாகர், மாநகராட்சி கவுன்சிலர் பாலசுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி