உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணாடம் - கிளிமங்கலம் டவுன் பஸ் இயக்க கோரிக்கை

பெண்ணாடம் - கிளிமங்கலம் டவுன் பஸ் இயக்க கோரிக்கை

பெண்ணாடம் : பெண்ணாடத்தில் இருந்து முருகன்குடி வழியாக கிளிமங்கலத்திற்கு அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெண்ணாடம் அடுத்த கிளிமங்கலம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமத்திற்கு போதிய பஸ் வசதி இல்லாததால் கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கு விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல 5 கி.மீ., துாரமுள்ள முருகன்குடி வந்து அங்கிருந்து பஸ் ஏறி வெளியூர் செல்ல வேண்டும். இதனால் காலவிரயம் ஏற்படுவதுடன் முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.எனவே, பெண்ணாடத்தில் இருந்து முருகன்குடி வழியாக கிளிமங்கலத்திற்கு அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை