உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொழிலாளர்களுக்கு நாளை சம்பளத்துடன் விடுமுறை

தொழிலாளர்களுக்கு நாளை சம்பளத்துடன் விடுமுறை

கடலுார்: ஓட்டுப் பதிவு நாளான நாளை தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டுமென, கடலுார் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சித்ரா கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நாளை (19ம் தேதி) நடக்கிறது. அதையொட்டி, நாளைய தினம் கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் இயங்கும் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களும் ஓட்டளிக்க ஏதுவாக சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இதனை மீறினால் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், வெளிமாநில தொழிலாளர்களை பொறுத்தவரை அவரவர் சொந்த மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நாளில் ஓட்டளிக்க முன்கூட்டியே செல்ல ஏதுவாக தொழிற்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்தல் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து கடலுார்-04142 231864, 9994726499, விழுப்புரம் 04146 251830, 6380427810 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை