உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் காப்பகத்தில் பெண் தப்பியோட்டம்

கடலுார் காப்பகத்தில் பெண் தப்பியோட்டம்

கடலுார் : கடலுார் காப்பகத்தில் இருந்து தப்பியோடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் 29 வயதுடைய பெண். இவர், கடந்தாண்டு செப்., 27ம் தேதி விபசார வழக்கில் ராமநத்தம் போலீசாரால் மீட்கப்பட்டு, கடலுார் அருகே தனியார் காப்பகத்தில் அடைக்கப்பட்டிருந்தார்.கடந்த நவ., 26ம் தேதி காப்பகத்தில் இருந்து தப்பி சென்றார். காப்பக ஊழியர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து காப்பக வார்டன் நேற்று முன்தினம் அளித்த புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய பெண்ணை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை