உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விதிமுறைகளை கடைபிடிக்க மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

விதிமுறைகளை கடைபிடிக்க மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

கடலுார்: கடலுார் மீனவர்களை புதுச்சேரி மீனவர்கள் சிறைப்பிடித்து சென்றதையடுத்து, தாழங்குடாவில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.கடலுார் அடுத்த தாழங்குடா மீனவர்கள் பைபர் படகில் புதுச்சேரி மாநில எல்லையான வீராம்பட்டினம் பகுதியில் அக்னி கூக்கான் எனப்படும் பிளாஸ்டிக் வலையை பயன்படுத்தி கனவாய் மீன் பிடித்தனர். மீன்பிடி வலை அறுந்து சேதமாகிறது என புதுச்சேரி மாநில மீனவர்கள் தாழங்குடா மீனவர்கள் 7 பேரை படகுடன் சிறைப்பிடித்து சென்றனர். இதனால் கடலுாரில் மீனவ கிராமங்களில் திடீர் பதட்டம் ஏற்பட்டது.தகவலறிந்த கடலுார் மீன்வளத் துறை அதிகாரிகள் வீராம்பட்டினம் சென்று பேச்சு வார்த்தை நடத்தி தாழங்குடா மீனவர்களை மீட்டு வந்தனர்.இந்நிலையில் நேற்று தாழங்குடா கிராமத்தில் மீனவ கிராம தலைவர்கள் தலைமையில் கூட்டம் நடந்தது. மீன்வளத்துறை உதவி இயக்குனர் குமரேசன், ஆய்வாளர் அஞ்சனாதேவி உள்ளிட்டோர் பங்கேற்று, இரு மாநில மீனவர்கள் சுமூக உறவுகள் குறித்தும், மீன்பிடிக்கும் முறைகள், எல்லையில் மீன்பிடிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை